Saturday, December 31, 2011

புதுவருட வாழ்த்துச் செய்தி - அதிமேதமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


புதிதாக சிந்தித்து செயற்படும் அரசியல் கலாசாரமானது அபிவிருத்தி நோக்கிய எமது தேசத்தின் பயணத்தை துரிதப்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு பிறக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாம் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் அதன் பக்கம் கவனம் செலுத்துகின்றோம். தீவிர திடசங்கற்பம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த எதிர்பார்ப்புகள் என்பனவும் அதில் அடங்கும். இது புத்தாண்டுப் பிறப்பின் மகிழ்ச்சியினை நாம் அனைவரும் இணைந்து அனுபவிக்க வழியமைக்கும் என்பதனை நாம் அறிவோம்.

கடந்த சில ஆண்டுகளில் தேசிய அபிமானத்தை கட்டியெழுப்பி அதனை வலுப்படுத்தி பல்வேறு வெற்றிகளை நாம் நாட்டிற்கு பெற்றுக் கொடுத்தோம். தூரநோக்குடனான முன்னேற்றகரமான செயற்பாடு கிடைக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தேசத்தின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தல் என்பனவே நாம் பெற்ற வெற்றியின் இரகசியமாகும்.

அதன் மூலம் நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட துடன் நாட்டின் அபிவிருத்திக்காக புதிய துறைமுகங்கள், பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் புதிய விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வரலாற்றிலே ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது.

நாம் அடைந்து கொண்ட அனைத்து வெற்றிகள் மூலமும் புதியதோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக காலடி எடுத்து வைத்தல் வேண்டும். புதிதாக சிந்தித்து செயற்படும் அரசியல் கலாசாரமானது அபிவிருத்தி நோக்கிய எமது தேசத்தின் பயணத்தை துரிதப்படுத்தும். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கும் அந்த நோக்கின் அடிப்படையிலேயே நாம் செயற்படுதல் வேண்டும்.

புதிய சிந்தனைகளுடன் செயற்படுவதன் மூலமே புதிய பாதைக்கு இட்டுச் சென்றுள்ள நாட்டின் அபிவிருத்தியினை மேலும் துரிதப்படுத்த முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும். அத்துடன் அன்பு, கருணை, இரக்கம் என்பவற்றுடன் சகவாழ்விற்காகவும் இப்புத்தாண்டிலே மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எமது திடசங்கற்பமாக அமைதல் வேண்டும். ஒற்றுமையாகவும், ஒன்றிணைந்தும் செயற்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு புதியதோர் தேசத்தைக் கட்டியெழுப்பும் இச்சந்தர்ப்பத்தில் மன உறுதியுடனும் சிறந்த எதிர்பார்ப்புக்களுடனும் இப்பணியினை மேற்கொள்வதற்கு முன்வருமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

பிறந்துள்ள புத்தாண்டானது அனைவருக்கும் சிறந்ததோர் புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment