(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை ஸ்கூல் ஒப்க இங்கிலீஸ் என்ற ஆங்கில முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் விடுகை விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியின் எம்.எஸ் காரியப்பர் மண்டபத்தில் அப்பாடசாலையின் அதிபர் திருமதி சியாமா சியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அஹமட் கலந்துகொண்டதுடன் ஏனைய அதிதிகளாக ஜனாதிபதி கூட்டினைப்பு உத்தியோகத்தர் எம்.எல்.ஏ. மஜீட்,
அம்பாரை மாவட்ட காணி திட்டமிடல் அதிகாரி நஜீப், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல். ஆதம்பாவா, வை.என். விமான போக்குவரத்து முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் எம். யாஸ்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment