Thursday, December 08, 2011

யாழ். வாக்களர் பதிவு தொடர்பான அறிவித்தல்


யாழ். மாவட்டத்தில் எவராவது மீளவும் தம்மை வாக்காளராக பதிவு செய்யாதிருந்தால் தேர்தல் திணைக்களத்திற்கு அறியத்தருமாறு யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிலிருந்து 41715 பேர் நீக்கப்பட்டிருந்தனர். இவர்களில் எவராவது தம்மை மீளவும் வாக்காளராக பதிவு செய்யத் தவறியிருந்தால் தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் அந்தந்த கிராம அலுவலகர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டால் இலகுவாகவிருக்கும். அவ்வாறு கிராம அலுவலகர்கள் உறுதிப்படுத்த மறுக்கும் பட்சத்தில் அக்கடிதத்தை தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment