
கென்யாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குலொன்றில் அந்நாட்டு பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய அகதிமுகாம் அமைந்துள்ள கென்யாவின் டடாப் நகரிலேயேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. சோமாலிய ஆயுதாரிகளினால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென கென்ய பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை சோமாலியாவிலுள்ள அல்-ஷபாப் அமைப்பினரின் தாக்குதல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக கென்ய படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென கென்ய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment