
இது எங்கட வீட்டுச் சொத்து, UNPயை நான் விட்டுப் போகமாட்டன் எண்டு ரணில் சின்னப் புள்ள மாதிரி அடம்பிடிக்கிறது உங்க எல்லாருக்கும் விளங்குதா? ரணிலுக்கு அரசியல் எண்டாலே தோஷம்தான் பாருங்கோ. அதுலயும் UNP எண்ட ஒரு தோஷம் புடிச்ச கட்சியை எதிர்க்கட்சி எண்டு பீத்திக்கிட்டுத் திரியுறார் மனுஷன். அதுல இருந்த எல்லோரும் கூடு விட்டு கூடு பாஞ்சிட்டங்க. அதுவும் கழுத தேஞ்சி கட்டெறும்பான கதையாத்தான் கெடக்கு.
கட்சிக்குள்ளேயே தலைவர் மேல நம்பிக்கை இல்ல. அதுக்குள்ளேயே பல சுயேச்சை குழுக்கள் இரிக்கி தெரியுமோ? ரணிலுக்கு ஆப்பு வைக்கிறதுக்கு எண்டே UNP ஆதரவாளர்கள் நிறைய பேர் இருக்கினம். ரணிலுக்கு எலெக்சன் கேட்டு கேட்டு தோக்கிரதுதான் வேலையே. முதல்ல UNP எண்டா ஒரு அரசாங்கத்துக்கு ஒரு பயம் இருந்திச்சி. இப்போ நையா பைசாக்கு கூட லாயக்கு இல்லாம போச்சு. அந்த கட்சியை வெச்சிக்கிட்டு மனிசன் கட்டிப் புடிச்சிட்டு அழுவுறார்.
அண்டைக்கு தலைவர் மாத்தம் எண்டு எலெக்சன் ஒண்டு வெச்சங்கலாம் பாருங்கோ, "அதுல மட்டும்" ரணிலுக்கு சான்ஸ் அடிச்சி இருக்காம். இதுக்கு ஒரு எலெக்சன் தேவையா....? சும்மா எல்லோரும் சேர்ந்து பம்மாத்து காட்டுவினம். அதைப்பார்த்த UNP (ரசிகர்) கூட்டம் கல்லை எடுத்து அடிச்சாங்களாம். அந்தக் கல்லை ரணில் எடுத்துக்கொண்டு ரிப்போட்டர்மார் கிட்ட 'இதுதான் என்னை தாக்க வந்த ஆயுதம்' எண்டு காட்டுறார். (ஏதோ ஈரான் விமானத்தை புடிச்ச மாதிரி...)
ரணிலுக்கு அவர்ர கட்சிக்காரர்களே, இவர் ஒரு "அந்த மாதிரி" ஆள் எண்டு சொன்னாங்களே. அதுக்கு மறுப்பு தெரிவிச்சி ஒரு அறிக்கை விட்டாரா இந்த மனுஷன்...? அப்போ மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா...? சொல்லுங்க தலைவரே, சொல்லுங்க..! "ஒரு கல்லுக்கு" எதிரா செய்தியாளர் மாநாடே நடத்துறீங்க. "அந்த ஒரு சொல்லுக்கு" வாயே திறக்க மாட்டிங்களே.!!
அப்பவே ரணில் வெளிநாட்டுக்குப் போக பயப்புட்டார். தண்ட தலைவர் பதவி பறிபோய் விடுமோ எண்ட பயத்தால. இப்போ ஏதோ சுத்துமாத்து பண்ணி மீண்டும் தலைவரா வந்து இருக்காரு. ரணில் ரைவரா இருக்கிற வரைக்கும் UNP வாகனம் சரியான பாதையில் செல்லாது. இதுதான் இந்த வாத்தியார் சபதம்.
- மண்டு வாத்தியார்
0 comments:
Post a Comment