Wednesday, December 21, 2011

தமிழர் பிரச்சினையில் அக்கறை இல்லாத தமிழ்க் கூட்டமைப்பு - ஜனாதிபதி


தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதில் அக்கறையில்லாத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு சுயநலப்போக்கில் செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டுகின்றார்.

பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக முக்கியஸ்தர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே ஜபாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்,  எல்.ரீ.ரீ.ஈ. போக்கிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தனது கொள்கைகளை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைகளுக்கு வந்துவிட்டு திடீரென அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் சுயநலப் போக்கில் கூட்டமைப்பு நடந்து கொள்கிறது.

 நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையை சர்வதேச ரீதியில் பகுப்பாய்வு க்கு உட்படுத்த வேண்டுமென்ற தேசப்பற் றற்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச ரீதியில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்திருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரே கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு .  அவர்களுக்கு தமிழர் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்துவதற்கு அக்கறையில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்று இது பற்றி உள்ளூரில் பகுப்பாய்வு செய்ய வெண்டுமென்று தேசிய உணர்வுடன் கருத்து வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஜனாதிபதி நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி அன்று பாராளுமன்றத்தில் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து பேசிய சபை முதல்வரும் நீர்ப்பாசன நீர் வளங்கல் முகாமைத்துவ அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் விளக்கிக் கூறியதாக சொன்னார்.

இவ்வறிக்கையில் காணாமல் போனவர்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டி ருக்கிறதே என்று ஜனாதிபதியிடம் இன்னுமொரு கேள்வி கேட்கப்பட்ட போது இந்த யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் மட்டுமன்றி 1989-1990ம் ஆண்டில் இடம்பெற்ற வன்முறைகளின் போது காணாமல் போனவர்கள் பற்றியும் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

கடந்த காலத்தில் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் எடுத்த தவறான முடிவுகளினால்தான் நாட்டில் இனப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து  பேரழிவை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.

ஆகவே அரசியல் கட்சிகளும்  அதன் தலைவர்களும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறதென்று அந்த நிருபர் சுட்டிக்காட்டிய போது இதற்கு பதிலளித்த ஜனாதிபதி  இதனால் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்களவர்களும்  முஸ்லிம்களும் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள் என்று தெரிவித்தார்.

தமிழ் கல்விமான்கள் மூவர் விடுத்த அறிக்கைகளை பகுப்பாய்வு செய்து பார்க்குமிடத்து யுத்தத்தின் கடைசி சில நாட்களின் போது நடந்த வேதனைக்குரிய நிகழ்வுகளை நேரில் பார்த்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எவ்விதம் எல்.ரி.ரி.ஈ. பொதுமக்களை துன்புறுத்தியதென்றும் ஆயுத முனையில் பொதுமக்களை பலவந்தப்படுத்தி தங்களுக்கு பணிவிடை செய்யுமாறு உத்தரவிட்டு துன்புறுத்திய தென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அரசாங்கம் ஏன் சர்வதேச ரீதியில் உலகநாடுகளுக்கு எல்.ரி.ரி.ஈ.யின் அட்டூழியங்களை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்ட கூடாதென்று கேள்விஎழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி நான் கிளிநொச்சியில் இருந்து வந்த ஒரு தமிழ் வயோதிபரை சந்தித்ததாகவும் அவர் எல்.ரி.ரி.ஈ. தங்களை பலவந்தப்படுத்தி துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும் தங்கள் அப்பாவி பிள்ளைகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தங்கள் படைகளில் சேர்த்துக் கொண்டு யுத்த முனைக்கு அனுப்பி அவர்களின் உயிர்களை இழக்கச் செய்ததாகவும் அழுது புலம்பினார் என்று தெரிவித்தார்.

எல்.ரீ.ரீ.ஈ. எவ்வளவுதான் முயற்சிகளை செய்து ஆயுதப் போராட்டத்தை நடத்தினாலும் இறுதியில் அம்முயற்சிகள் பயனற்று போயின. இறுதியில் எல்.ரி.ரி.ஈ. மேற்கொண்ட இந்த விசப்பரீட்சையில் கிடைத்த பயன் என்னவென்று கேட்ட ஜனாதிபதி இந்த பிரச்சினையை பயன்படுத்தி சில பத்திரிகைகளும் அரசியல் இலாபம் திரட்ட எத்தணித்த போதிலும் அவற்றின் முயற்சிகளும் பயனற்றதாக போய்விட்டன என்று கூறினார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மேல் எழுந்தவாரியாக ஆராய்ந்திருக்கும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம்  இவ்வறிக்கையில் எவ்வித முழுமையான செயற்திட்டத்தையும் தங்களால் அவதானிக்க முடியவில்லையென்றும் பொருத்திருந்தே பார்க்க வேண்டுமென்றும் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கான இவ்வறிக்கையில் எவரும் பொறுப்பாளிகளாக இனம்காணப்படவில்லை என்றும் அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்  அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு நியாயமற்றது என்று தெரிவித்தார். தருஸ்மன் அறிக்கையைவிட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மைமிக்கதாக அமைந்திருக்கிறதென்றும் அவர் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி  30 ஆண்டுகால யுத்தத்தைப் பற்றி கவலைப்படாத அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் 30 ஆண்டுகாலத்தில் எல்.ரி.ரி.ஈ. செய்த அக்கிரமங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கு அக்கறை காட்டாத சர்வதேச சமூகம் யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்த நிகழ்வுகளில் மாத்திரம் ஆர்வம் காட்டுவதற்கான ஓரவஞ்சனையான காரணம் ஒன்று இருக்கிறதென்றும்  இலங்கையை இவ்விதம் குற்றம் காணும் இந்த சர்வதேச சமூகம் மற்ற நாடுகளை பொறுத்தமட்டில் வேறு விதமாக நடந்து கொள்வது கவலையை அளிக்கிறது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சில விடயங்கள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டு சில குற்றச்செயல்கள் பற்றி விசாரணைகளை நடத்த வேண்டுமென்று சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் குற்றமிழைத்த சம்பவங்கள் குறித்து விரிவான அடிப்படையில் விசாரணைகளை செய்திருக்கிறதென்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அமெரிக்க அரசாங்கமும் இவ்வறிக்கையை தவறான மனோ நிலையில் இருந்து ஆராய்ந்து பார்க்கிறது என்றார்.

ஒரு சம்பவம் சில காலத்திற்கு முன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் ஐவர் சுட்டுக்கொல்லப்பட் டதை அடுத்து அரசாங்கம் நேர்மையான விசாரணைகளை நடத்தி பல பொலிஸ் அதிரடிப்படை வீரர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமளவிற்கு மிகவும் நேர்மையான கொள்கையை கடைப்பிடித்து வந்தது என்று தெரிவித்த ஜனாதிபதி  இறுதியில் 10 மாத காலம் இந்த அதிரடி பொலிஸ் படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் விளக்கமறிய லில் இருந்த போது அவர்கள் மீது கருணைகாட்டி ஆனந்தசங்கரி இவர்களுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை அவர்களை விடுவித்து விடுங்கள் என்று என்னிடம் வேண்டுகோள்விடுத்த பின்னர் நான் அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தேன் என்று ஜனாதிபதி சொன்னார்.

0 comments:

Post a Comment