Thursday, December 08, 2011

நகர்ப்புற சிறைச்சாலைகள் காடுகளுக்கு இடமாற்றம்

(கலாநெஞ்சன்)  
சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ் வளிக்கப்படும் போது, அவர்களது மனோதத்துவ நிலைமையை மேம்படுத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மனவள அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில், சிறைச்சாலைகளை புனரமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக நகர்ப்புறச் சூழலிலிருந்து விடுபட்டு அதிக வசதி மற்றும் வாய்ப்புகள் கொண்ட இடங்களில் சிறைச்சாலைகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிற்கான நிதியொதுக்கீட்டில் இத்திட்டத்திற்காக மேலதிகமாக 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தங்காலை சிறைச்சாலை அங்குனுகொல பெலஸ்ஸவிற்கும், போகம்பர சிறைச்சாலை பல்லேகலவிற்கும், வெலிக்கடை சிறைச்சாலை மஹரவுக்கும் மாற்றப்படவுள்ளது.

0 comments:

Post a Comment