Saturday, December 10, 2011

இவ்வாண்டின் இறுதி சந்திரகிரகணம் இன்று


2011ஆம் ஆண்டின் கடைசி பூரண சந்திரகிரகணம் இன்றாகும். இச்சந்திரகிரகணம் மாலை 5 மணி 2 நிமிடத்திற்கு தொடங்கி இரவு 11 மணி 2 நிமிடம் வரை நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது. சந்திர கிரகணம் ஏற்படும்போது சரியாக இரவு 8 மணியளவில் பூரண சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் சந்திரகிரகணத்தின் முழு நிகழ்வையும் தெளிவாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை கிரகணத்தின்போது சந்திரனின் ஒரு பகுதி சிகப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment