தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை கொழும்பு தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையில் சுமார் 2,000 முன்பள்ளி சிறார்களுக்கு விஷேட சிறுவர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, சிறுவர் செயலகத்தினுடைய பணிப்பாளர் நாயகம் யமுனா பெரேரா, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசிய பிராந்திய சிறுவர்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



0 comments:
Post a Comment