(ஏ.ஜே.எம்.ஹனீபா)
கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகளுக்கான குழுக் கூட்டம் நேற்று கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வீ.லவநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, கல்முனை சிறிசுமத்திராம விஹாரையின் விஹாராதிபதி றன்முத்துகல சங்கரத்தின தேரோ, கல்முனை பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.சதாத், சுகாதார வைத்திய அதிகாரி உட்பட ஏனைய துறைசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனைப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் குற்றச் செயல்கள், அனாமோதய செயற்பாடுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டதுடன் அவற்றை இல்லாமல் செய்வதற்கான சட்டநடவடிக்கைகளை துரிதமாக மேற்க்கொள்ளுவதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
0 comments:
Post a Comment