
மெல்போர்ன் டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 333, இந்தியா 282 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. ஹசி (79), பட்டின்சன் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஹசி (79), ஹில்பெனாஸ் (14) அவுட்டாக, அவுஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பட்டின்சன் (37) அவுட்டாகாமல் இந்திய அணியை தோற்கடித்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேவக் (7), காம்பிர் (13), டிராவிட் (10), சச்சின் (32), லட்சுமண் (1), விராத் கோஹ்லி (0), தோனி (23) ஆகியோர் ஏமாற்றினர். பின் வரிசையில் அஷ்வின் (30), ஜாகிர் கான் (13), உமேஷ் யாதவ் (21) ஓரளவு ஆறுதல் தந்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 169 ரன்களுக்கு சுருண்டு, 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இஷாந்த் சர்மா (6) அவுட்டாகாமல் இருந்தார்.
0 comments:
Post a Comment