Saturday, December 31, 2011

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ்ப்பாணம் வருவார்



இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் இந்திய விஞ்ஞானியுமான அப்துல் கலாம் ஜனவரி மாதத்தில் யாழ்ப்பாணம் வருவதாக தெரியவருகிறது. இவரது வருகையையொட்டி இந்திய தூதுவராலயம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகின்றது. அப்துல் கலாம் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானியாவார்.

யாழ்ப்பாணம் வருகைதந்து யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பின்னர் அனைத்துப் பீடங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையே சந்தித்து உரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் விஜயம் செய்வார் என்றும் இப்போதைக்கு இந்த விடயங்களை மாத்திரமே உறுதிப்படுத்த முடியும் என்றும் இந்திய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment