Sunday, December 11, 2011

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும் மாறுபட்ட வகையில் வாக்களிப்பு


(புத்தளம் செய்தியாளர்) 
2012 வடமேல் மாகாண சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும் மாறுபட்ட வகையில் வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வடமேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுக்களின் தலைவர் எஸ்.ஏ. எஹியா தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்துதெரிவித்த எஹியா,

வடமேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்தை நடாத்தி அது தொடர்பாக எழுத்து மூலம ஆவணங்கள் வடமேல் மாகாண முதலைமச்சருக்கு அனுப்பிய நிலையில், நிதி ஒதுக்கீடு தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தரப்படாமை, அரச கூட்டங்களுக்கு எமக்கு அழைப்பு கிடைக்காமை உட்பட பல காரணங்களை முன்வைத்து வடமேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும் மாறுபட்ட வகையில் வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

குருநாகல் மாவட்ட உறுப்பினர் தஸ்லிம் அரசுக்கு எதிராகவும், மற்றுமொரு குருநாகல் மாவட்ட உறுப்பினர் ரிஸ்வி அரசுக்கு ஆதரவாகவும் வாக்களிக்க நான் சபை அமர்வுகளில் கலந்து கொண்டாலும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது இருந்தேன் என்று எஹியா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment