
(நிதால்)
வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் 26 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகினர். 5 நாட்கள் அங்கு தங்கி நிற்கும் இவர்கள் இந்தியாவின் விவசாயத்துறை, கைத்தொழில்துறை தொடர்பாக நேரடியாக பார்வையிட உள்ளனர். புத்தளம் மாவட்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டீ.எம். தாஹிர், எம்.எச்.எம். றியாஸ், எஸ்.ஏ. எஹ்யா ஆகிய மூவரும் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment