
திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் வேதாகம சோதிட பூஷணம் கலாபூஷணம் சிவஸ்ரீ.சி. சிதம்பரநாதக் குருக்கள் எழுதிய திருமணப் பொருத்தம் என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 18.12.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சாவகச்சேரி கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் இ.கைலாயபிள்ளை தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் ஆசியுரையை விளைவேலி ஆதீனகுரு சிவஸ்ரீ து.கு. ஜெகதீஸ்வரக் குருக்களும் வாழ்த்துரையை டாக்டர் சு.சி. அருளானந்தமும் வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசனும் நயப்புரையை வித்தியா பூஷணம் ப.சிவானந்த சர்மாவும் (கோப்பாய் சிவம்) நிறைவுரையை திருக்கணித நிலைய அதிபர் ஜோதிடமணி சி.ஜெகதீஸ்வர சர்மாவும் வழங்கவுள்ளனர்.
கல்வயல் வீரகத்தி விநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ. சி.கிருபாகரக் குருக்கள் நூலை வெளியிட்டு வைக்க சாவகச்சேரி மக்கள் வங்கி முகாமையாளர் க.சண்முகலிங்கம் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்வார்.
நூல்வெளியீட்டு நாளன்று ஈழத்தின் மூத்த சிவாச்சாரியார்களுள் ஒருவராகத் திகழும் சிவஸ்ரீ. சி. சிதம்பரநாதக் குருக்கள் தனது எழுபத்தாறாவது அகவை நிறைவைக் காண்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment