Friday, December 16, 2011

மெய்வல்லுநர் போட்டி நடுவர்களுக்கு பயிற்சி


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை மெய்வல்லுநர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள மெய்வல்லுநர் போட்டிகளில் நடுவர்களாக கடமையாற்றுபவர்களுக்கு பயிற்சியளிக்கும் வேலைத்திட்டம் அண்மையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய சேவைகள் மன்றத்தின் பணிப்பாளரும் இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் உப தலைவருமான அஜித் நாரங்கல தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அதிகளவான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திலுள்ள அதிகளவான மெய்வல்லுநர் போட்டி நடுவர்கள் பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இவ்வகையான செயலமர்வுகளை நடத்தி தேசிய மட்டப்போட்டிகளுக்கு தகுதியான நடுவர்களை அனுப்பும் செயல் திட்டத்தில் இறங்கியுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்ற சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா இளைஞர்களை சர்வதேச ரீதியாக சிறந்தவர்களாக செயற்படுத்து வதற்காக மேற்கொள்ளும் முயற்சி என்பது குறிப்கிடத்தக்கது.





0 comments:

Post a Comment