Saturday, December 31, 2011

ரூபவாஹினி சவால் கிண்ண கரப்பந்தாட்டப் இறுதிப் போட்டி


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சு என்பன இணைந்து நடத்திய 27 இளைஞர் சேவைகள்- ரூபவாஹினி சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமை மாத்தறை றுகுணு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டி ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக இடம்பெற்றது. ஆண்கள் பிரிவில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி இராணுவ அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அணியும் இலங்கை விமானப் படை அணியும் மோதிய போட்டியில் இலங்கை விமானப் படை அணி வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் விசேட அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவும் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் மொஹான் சமர நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment