
(நமது செய்தியாளர்)
முல்லேரியான துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புபட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்றும்வரும் கொழும்பு மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரா துமிந்த சில்வாவுக்கு இனி ஒரு காலும், ஒரு கையும் இயங்காது என மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கடந்த தேர்தல் ஒன்றின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாரத லக்ஷ்மன் பிரேமச் சந்திர கொல்லப்பட்டு துமிந்த சில்வா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைவாக இவரின் மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. மீண்டும் இவ்வழக்கு எதிர்வரும் ஜனவரி 3ஆம் நடைபெறும்.
0 comments:
Post a Comment