Friday, December 23, 2011

வாழைச்சேனை கடதாசி ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பு


(எஸ்.எல். மன்சூர்) 
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தேசிய கடதாசி ஆலையான வாழைச்சேனை காகித உற்பத்தி தொழிற்சாலையில் சுமார் 100 மில்லியன் ரூபா மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் தொழிற்சாலை இருளில் மூழ்கியுள்ளது. 

இதன்காரணமாக தொழிற்சாலை இயக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 1956ஆம் ஆண்டில் உருவாக்கம் பெற்ற இத்தொழிற்சாலை கடந்த பல வருடண்களாகவே நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆதலால் அங்கு கடமையாற்றும் சுமார் 175க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சம்பளமும் கடந்த பல மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலையும் தொடர்கிறது. ஊழியர்கள் சங்கம் ஊழியர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விட்டிருந்தது. நட்டத்தில் இயங்கும் இக்கடதாசிச் தொழிற்சாலையின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு மீள்நிர்மாணம் செய்து நவீன முறையில் அமைந்த உற்பத்திகளை மேற்கொண்டு ஆலையை இயக்குவதற்கு அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது இருளில் மூழ்கியுள்ள நிலை தொடரா வண்ணம் நிருவாகம் நடவடிக்கை எடுப்பதுடன், சம்பளம் பணத்தினையும், ஊழியர்களுக்கான நிவாரணத்தையும் வழங்க வேண்டுமெனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment