Tuesday, December 20, 2011

சுனாமி எச்சரிக்கை ஒத்திகையினால் மக்கள் பதற்றம்


(முஹம்மது பிறவ்ஸ்)
தற்பொழுது கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு உள்ளிட்ட பல பிரதேசங்களில் சுனாமி எச்சரிக்கை கோபுரத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டபோது பல மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த ஒத்திகைக்கு நேற்று அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தும், டிசம்பர் மாதத்தில் சுனாமி வந்த காரணத்தினால் மக்கள் அதையும் பொருட்படுத்தாது பதற்றத்தில் உள்ளனர்.


அத்துடன் தற்போது தென்கிழக்கில் காற்றுடன் கூடிய, தொடர்மழை பெய்து வருகின்றது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. இதனால் மக்கள் பாரிய அச்சத்துடன் இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment