தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகள் மற்றும் அதிகாரிகளுடனான இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் (நிருவாகம்) மனுல பெரேரா தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச் செயலாளர் அமைச்சின் அதிகாரிகள் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா ஆகியோர் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை மாவட்ட உத்தியோகஸ்தர்கள்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட சம்மேளன, பிரதேச சம்மேளனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment