
நாடெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு போசணையூட்டுவதற்காக வீட்டுப் பாவனைக்கான கோதுமை மா, முழுமையான கோதுமை மா, ஆட்டா மா மற்றும் ரவை ஆகியன அறிமுகம். செவன் ஸ்டார் வர்த்தக குறியீட்டினைக் கொண்ட மாவின் உற்பத்தியாளர்களான வரையறுக்கப்பட்ட செரண்டிப் மா ஆலை பிரைவேட் நிறுவனமானது, தனது நான்கு வகையான புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இன்று நுகர்வோர் வர்த்தக சந்தைக்குள் பிரவேசித்துள்ளது.
இப்போது முதல் நாட்டிலுள்ள நுகர்வோர் அனைவரும் தமது தேகாரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உற்பத்திகளான வீட்டுப் பாவனைக்கான கோதுமை மா, முழுமையான கோதுமை மா மற்றும் ஆட்டா மா போன்றவற்றை 1 கிலோ கிராம் நிறையுடைய பைக்கட்டுகளிலும் ரவையை 500 கிராம் பைக்கட்டுகளிலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் செரண்டிப் மா ஆலை நிறுவனத்தின் கோதுமை மா ஆனது, பிட்டு, ரொட்டி, இடியப்பம் போன்ற பல உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அதேநேரம் முழுமையான கோதுமை மா ஆனது, பிறவுன் நிற பாண்கள், ரொட்டிகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு மிகவும் பொருத்தமான தெரிவாகும். ஆட்டா மாவானது, ஆட்டா ரொட்டி, சப்பாத்தி, பூரி ஆகியவற்றை தயாரிப்பதற்காக விஷேடமாக உற்பத்தி செய்யப்பட்டது என்பதுடன் ரவை ஆனது, கேக் வகைகள், இனிப்புப் பண்டங்கள், இட்லி, தோசை மற்றும் உப்புமா போன்றவற்றை தயாரிக்கும் கலவைகளில் சேர்க்கக் கூடிய மிகச் சிறப்பான உற்பத்தியாக திகழ்கின்றது.
செரண்டிப் மா ஆலை பிரைவேட் லிமிட்டெட் (SMFL) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான சதக் அப்துல் காதர் கூறுகையில், “இலங்கையில் எமது நிறுவனம் செயற்பாடுகளை ஆரம்பித்து மூன்று வருட பூர்த்தியை கடந்த மே மாதத்தில் நாம் கொண்டாடினோம். இதன்மூலம், இலங்கை நுகர்வோருக்கு தரமான மா வகைகளை எவ்வித தடங்கல்களும் இன்றி தொடர்ச்சியாக வழங்குவதன் ஊடாக ‘தேசத்திற்கு போசணையூட்டுதல்' என்ற எமது நோக்கத்தின் அடிப்படையிலான செயற்பாடுகள் வெற்றிகரமான மூன்றாண்டுகளை பூர்த்தி செய்துள்ளன. நுகர்வோர் சந்தைக்குள் காலடி எடுத்து வைப்பதானது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு நாம் முன்னர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலான முயற்சியாகும். அதனை நிறைவேற்றுவதற்கான நேரம் இப்போது கனிந்து வந்துள்ளது' என்றார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தினை துபாயில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள அல்-குராயிர் குழுமக் கம்பனிகளின் ஒரு அங்கத்துவ நிறுவனமான செரண்டிப் மா ஆலை பிரைவேட் லிமிட்டெட் ஆனது, தனது 56 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய அதி நவீனமானதும் ஒரே தடவையில் நாளொன்றுக்கு 1000 தொன் உற்பத்தியை மேற்கொள்ளும் அளவுக்கு கொள்ளளவை கொண்டதுமான கோதுமை மா ஆலையின் செயற்பாடுகளை கொழும்பு துறைமுகத்தில் 2008ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி ஆரம்பித்தது. அந்த வகையில், தரமான கோதுமை மாவின் விநியோகமும் ஆரோக்கியமான போட்டிச் சூழலின் அனுகூலங்களும் இலங்கை வாடிக்கையாளர்கள் மற்றும் இத்துறை சார்ந்தவர்களுக்கு கிடைப்பதற்கான வாக்குறுதியை நிறுவனம் வழங்கியது.
முழுமையான கோதுமை மா மற்றும் ஆட்டா மா போன்ற பெறுமதி சேர் உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது மா நிறுவனமாக திகழ்வதன் மூலம் செரண்டிப் மா ஆலை பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் சாதனை ஒன்றினை படைக்கின்றது. தமது தேகாரோக்கியம் தொடர்பில் அதிக அக்கறை கொண்ட¬வர்களான இலங்கையர்கள், மேலும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நோக்கி மிக வேகமாக முன்னேறிய வண்ணமுள்ளனர். முழுமையான கோதுமை மா மற்றும் ஆட்டா மா போன்றன அதிகரித்து வரும் இவ்வாறான நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு மிகப் பொருத்தமான உற்பத்திகளாகும். எமது ஆட்டா மாவானது உயர்ந்தளவான ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளது மட்டுமன்றி, நுகர்வோர் சந்தையில் மிகவும் சிக்கனமாக விலையிடப்பட்ட மாவாகவும் காணப்படுகின்றது. ஆட்டா மாவில் உயர்ந்தளவில் உள்ளடங்கியுள்ள தவிடு ஆனது, அதனை நார்ச்சத்துடைய உணவாக மாற்றுவதுடன் இளைஞர்களாலும் முதியோர்களாலும் இலகுவில் ஜீரணிக்கக் கூடியதாகவும் இவ்வுற்பத்தி காணப்படுகின்றது என்று திரு. சதக் மேலும் கூறினார்.
'இத்துறையில் காணப்படும் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பாக சேவையாற்றும் நோக்கில், நாம் தொடர்ச்சியாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றோம். எமது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து பேக்கரி பணியாளர்களுக்காக பல்வேறு வகையிலான தொழில்நுட்பம் சார் பயிற்சிப் பட்ட¬றைகளை நடத்தியிருப்பதுடன், பேக்கரியில் உற்பத்திகளை மேற்கொள்வதில் தற்போது பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் தொடர்பான அறிவினை அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில், இந்தப் புதிய மா உற்பத்திகள் உள்நாட்டுச் சந்தையில் வெற்றி பெறும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம்' என்றும் திரு. சதக் மேலும் குறிப்பிட்டார்.
செரண்டிப் மா ஆலை பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தாய்க் கம்பனியான ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் உள்ள அல் குராயிர் குழுமக் கம்பனிகள், தனது மா உற்பத்திகளின் தொடரில் 20 இற்கும் மேற்பட்ட மா வகைகளை கொண்டுள்ளது. அவற்றுள் மிகவும் தனிச் சிறப்புமிக்க உற்பத்தியாக நீரிழிவுக்கு பலன் தரக்கூடிய மா திகழ்கின்றது. இப்பிரிவில் புதிய வகையான மா உற்பத்திகள் சிலவற்றை மிகவிரைவில் இலங்கை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன.
செவன் ஸ்டார் மாவானது, உலகெங்கும் உள்ள சிறந்த கோதுமை வயல்களில் இருந்து பெறப்பட்ட தரமான கோதுமை தானியத்தைப் பயன்படுத்தி அனுபவம் பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களினால், மனிதர்களின் கை படாதவாறு (இயந்திரத்தினால்) உற்பத்தி செய்யப்படுகின்றது. செரண்டிப் மா ஆலையானது உபாய ரீதியான அமைவிடமாக திகழும் கொழும்பு துறைமுகத்தில் அமையப் பெற்றுள்ள காரணத்தால், இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் நட்சத்திர தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையுடன் தரமான கோதுமை மாவினை விரைவாக வழங்கக் கூடியதாகவுள்ளது.
0 comments:
Post a Comment