(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்ந இடமாற்றக் கட்டளையின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய கலாநிதி எம். கோபாலரத்தினம் (SLAS-I) அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்இடமாற்றம் 2012.01.01. இலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள் நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.வி.அபேகோன் தெரிவித்துள்ளார். இவ் இடமாற்றக் கட்டளையின்கீழ் தற்போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்து 36 பேர் இடமாற்றம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment