
(றிஸான் முகம்மட்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்தும் வடக்கு, கிழக்கு உள்ளுராட்சி சேவைகளை அபிவிருத்தி செய்யும் ‘நெல்சிப்' திட்டத்தின்கீழ் அக்கரைப்பற்று மாநகரசபை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் பல்வேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தவுள்ளது. 2012 அபிவிருத்திப் பணிகளுக்கான செயற்றிட்டப் பிரேரணைகள் பரிசீலனை செய்யப்பட்டன.
அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சமூகமளித்த நெல்சிப் பிரதித் திட்டப் பணிப்பாளர் என்.தமிழ்ச்செல்வன், சூழல் முகாமைத்துவ நிபுணர் வீ. பிரேமச்சந்திரன், சமூகப் பாதுகாப்பு நிபுணர், பொறியியலாளர் ஏ. வேல்மாணிக்கம் ஆகியோர் அக்கரைப்பற்று மேயர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி, பிரதி மேயர் எம்.எம்.எம். றிஸாம், மாநகர ஆணையாளர் எம்.வை. சலீம் மற்றும் உத்தியோகத்தர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்து பெற்றுக்கொண்டனர்.



0 comments:
Post a Comment