Thursday, December 08, 2011

முன்னணி உத்தியோகத்தர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழா


(றிஸான் முஹம்மட்
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆறு முன்னணி உத்தியோகத்தர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழாவொன்றை அட்டானைச்சேனை வர்த்தகர்கள் சங்கம் ஏற்பாடுசெய்து நடாத்தியது.

அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் வர்த்தகர்கள் சங்கத்தலைவர் .பி.நூறுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பு நிர்மாணம் நீர்வழங்கல் மற்றும் கிராமிய மின்சாரம் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல்ஹாபிஸ் என்.எம்.அப்துல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்..அஸீஸ், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் .எல்.எம்.காசிம், முன்னாள் நீதிபதி கலாநிதி .எல்..பூர், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட லிரிவுரையாளர் கலாநிதி .ஜௌபர், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





0 comments:

Post a Comment