Wednesday, December 14, 2011

கிழக்கில் மீண்டும் தொடர் மழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
கிழக்கில் மீண்டும் தொடர் மழை பெய்து வருகின்றது. தாழ்நிலப் பிரதேசங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேசமயம் தொழில்துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விஷேடமாக செங்கல் உற்பத்தி, மேட்டுநிலப் பயிர்செய்கை, குடிசைக் கைத்தொழில்கள் என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாளாந்த உணவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் அசாதாரன சூழ்நிலை காரணமாக உள்ளுர் மரக்கறிப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதுடன் விலைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment