Friday, December 02, 2011

தென்கிழக்கு பல்கலைக்கழக கண்காட்சி


(எஸ்.எல். மன்சூர்) 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கண்காட்சி, பண்பாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும். இன்றைய தினத்தில் காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்காட்சிக் கூடங்களுக்கு பாடசாலை மாணவர்களும், பெரியவர்களும் என அணிதிரண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சில திறந்தவெளி கலாசார நிகழ்வுகள் தவிர்ந்தவை மாலையில் ஆரம்பிக்கப்படும் எனக்கூறப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பல இடங்களில் காட்சிக்கூடங்கள் நிறுவப்பட்டிருந்தமை மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குறிப்பாக கலாசார அரும்பொருட்சாலை கூடம் சிறப்பாக இருந்தது. இலங்கையில் வாழ் முஸ்லிம் சமூகத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழ்ந்த முன்னோர்களது வளமார் முதுசங்களைப் பட்டியலிட்டு பாதுகாத்துக் கொண்டு அவற்றை எதிர்கால சந்ததிகளும் அறிந்து கொள்ளும்படி செய்துள்ளமை மிகவும் வரவேற்கக் கூடியதொரு அம்சமாகும். 

அத்துடன் தொல்பொருட்கூடம், அறாபி எழுத்துக்கள் அடங்கிய காட்சியகம், நூல்காட்சியும், விற்பனைக்கூடம், கணனிப் பட்டறை, டெங்கு நோய் தடுப்புப் பிரிவினரின் காட்சியகம், பரராணுவத்தினரின் ஆயுதக் காட்சிக்கூடம், பொலிசாரின் செயற்பாடுகள் போன்ற பல்வேறுபட்ட காட்சிக் கூடங்கள் பல்கலைக்கழ மண்டபங்களில் விரிவாக வைக்கபட்டு அவற்றுக்குப் பொறுப்பான பல்கலைக்கழக மாணவர்களது விளக்கங்களும் பார்வையாளர்களை மிகவும் கவர்வனாவாய் இருந்தது.

மேலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினரின் வைத்திய முகாமும் இடம்பெறுகிறது. அத்துடன் மூவின மாணவர்களும் பயிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் சிங்கள, தமிழ் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் காட்சிக் கூடங்களும் அமையப்பெற்றுள்ளமை இன்னும் சிறப்பைத் தருகின்றது. மாலையில் இடம்பெறும் திறந்தவெளிக் கலை கலாசார நிகழ்வுக்கென அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மேடை ஒலுவில் கழியோடைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளமையும் மிகவும் ரம்மியமான தோற்றத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் காட்சிக் கூடங்களைப் பார்க்க வருகின்றவர்கள் எந்த எந்த பாதைகளால் சென்று பார்ப்பது என்பது பற்றிய சரியான, தெளிவான குறியீட்டுப் படங்கள் செல்லும் வழிகளில் காட்சிப்படுத்தப்படவில்லை என அங்கு சென்றுவந்தவர்கள் கூறும் குறைபாடாகவும் இருந்து.














0 comments:

Post a Comment