Monday, December 12, 2011

'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்' செயலமர்வு


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் சம்மாந்துறை பிரதேச செயலக சமூக பராமரிப்பு மையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்' எனும் தலைப்பிலான செயலமர்வு நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பஸீலா அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.சலீம், தலைமை சமூர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன் உற்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வன்முறைகள் தொடர்பான வீடீயோ காட்சிகளும் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment