(ஏ.ஜே.எம்.ஹனீபா)
பேரதனைப்பல்கலைக் கழகத்தின் அரசரிவியல் துறை விரிவுரையாளர் ஏ.பி.சர்ஜூன், மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் சமாதான கற்கைநெறிப் பிரிவின் சிறப்புப் பட்டதாரியுமான ஏ.எம்.றிபான் ஆகியோர் எழுதிய "சமகால அரசியல் எண்னக்கருக்கள்" நூல் வெளியீட்டு விழா அண்மையில் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் மஹா பொல மண்டபத்தில் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் முதல்வர் கே.எல்.ஏ.தசூல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தென் கிழக்கு பல்கலை கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகளாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானதுறை தலைவர் ஏ.ஏ.ஜப்பார், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, ஸரீனா கபூர், உதவி விரிவுரையாளர்களான எம்.ஏ.எம்.பௌஷான்ன், இர்பான், நூலகர் ஏ.றிபாஉதீன், ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எம்.எம்.சஹீட்,எஸ்.ஏ.றாசீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment