
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் கம்பனியின் மொத்த வருமானம் ரூபா 1.1 பில்லியனாக உயர்வடைந்தது. கடந்த வருடத்தில் இதன்பெறுமதி ரூபா. 423 மில்லியனாக காணப்பட்டது.
வர்த்தக வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களிற்கிடையே குறைந்த வட்டிவீத போக்கின் அடிப்படையில் காணப்பட்ட கடுமையான போட்டி நிலைமைகளுக்கு மத்தியிலும் கொமர்ஷல் கிரடிட் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. இத்துறையை ஆக்கிரமிக்கும் வகையிலான நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இவ் வளர்ச்சி எடுத்துக்காட்டாக அமைவது மட்டுமன்றி, உபாய நடவடிக்கைகள், செயற்றிறன் மிக்க வர்த்தகம் மற்றும் சந்தை விஸ்தரிப்பு தொழிற்பாடுகளினால் இது கிடைக்கப் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் சொத்துத் தளமானது தற்போது 7.4 பில்லியன் ரூபாவாகியுள்ளது. இதன்படி கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் காணப்பட்ட 5.3 பில்லியன் ரூபா சொத்துத் தளத்துடன் ஒப்பிடுகையில் 40வீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மேற்படி காலப்பகுதியில் கொமர்ஷல் கிரடிட் நிறுவனம் 337,000 வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்த்துக் கொண்டுள்ளது. பொது மக்கள் இந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு இது மிகத் தெளிவான சமிக்ஞையாக அமைகின்றது. இதன் காரணமாக, 2010ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் 3.8 பில்லியன் ரூபாவாக இருந்த மொத்த நிலையான வைப்பானது தற்போது 5.1 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
நிறுவனம் இந்தக் காலாண்டில் பெற்றுக் கொண்ட அபூர்வமான நிதிப் பெறுபேறுகளுள், தேறிய வட்டி வருமானத்தில் (NII) ஏற்பட்ட 246 வீத அதிகரிப்பும் உள்ளடங்குகின்றது. இதன் பிரகாரம், 2010 செப்டெம்பர் மாதத்தில் ரூபா. 204.7 மில்லியனாக இருந்த தேறிய வட்டி வருமானமானது 2011 செப்டெம்பரில் ரூபா. 708 மில்லியனாக அதிகரித்துள்ளது. தேறிய வட்டி வருமானத்தில் (NII) குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்பு பதிவு செய்யப்படுவதற்கு வட்டி வருமானத்தில் ஏற்பட்ட 174 வீத அதிகரிப்பு உதவியது.
கொமர்ஷல்; கிரடிட் நிறுவனமானது அனைத்து பிரிவுகளிலுமான கடன் தொடரில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்த அதேவேளை, செயற்படாக் கடன்கள் (NPA) வீதத்தினை 3.29மூ ஆகவும் பேணியுள்ளது. உயர்ந்தளவிலான சர்வதேச தராதரத்தைக் கொண்ட சேவை மற்றும் செயற்பாடு என்பவற்றை அடையாள நியமமாக நிலைநிறுத்தியுள்ள ஒரு முன்னணி நிதியியல் நிறுவனம் என்ற நன்மதிப்பை மேலும் மெருகூட்டும் வகையில் கொமர்ஷல் கிரடிட் ஆனது, அண்மையில் மலேசியாவில் நடைபெற்று முடிந்த UDC Business Awards நிகழ்வில் 'ஆசியாவின் மிகச் சிறந்த நிதிக் கம்பனி' என்ற விருதினை பெற்றுக் கொண்டுள்ளது.
வர்த்தக அபிவிருத்தியில் கொமர்ஷல்; கிரடிட் நிறுவனம் நிகழ்த்தியுள்ள அதியுன்னத சாதனைகளை UDC முன்னுதாரணமாக அடையாளம் கண்டுள்ளமையே கம்பனி இந்த விருதினை பெறுவதற்கு முக்கியமான விடயமாகக் காணப்பட்டது. ஆசிய பிராந்தியத்தில் பல புகழ்பெற்ற நிறுவனங்கள் போட்டியிட்ட போதிலும், கடந்த பல வருடங்களாக கொமர்ஷல் கிரடிட் பெற்றுக் கொண்ட நட்சத்திர அந்தஸ்துடனான வெற்றிப் பதிவுகள் மற்றும் சாதனைகளை முறியடிக்கும் பெறுபேறுகள் என்பவற்றின் காரணமாக இந்த கௌரவமான விருதினை நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளன.
0 comments:
Post a Comment