Wednesday, January 04, 2012

அரசாங்கத்தை அரச ஊழியர்கள் விமர்சிக்க முடியாது - பிரதமர் டி.எம். ஜயரத்ன


(சம்யா) 
இலங்கையிலுள்ள அரசாங்கத்தில் பணியாற்றுகின்ற அரச ஊழியர்கள் எவரும் அரசாங்கத்தின் அரசியல் குறித்து விமர்ச்சிக்க முடியாது என பிரமந்திரி டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். பிரதமரின் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகின்றபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும அரச சேவையாளர்களுக்காக வழங்கப்படுகின்ற பணம் பொதுமக்களின் பணத்திலிருந்தே சம்பளமாக வழங்கப்படுகிறது. இலங்கையில் அரசாங்க பணியாளர்கள், அரசாங்கத்தின் அரசியல் குறித்து விமர்சிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். எனவே பொது மனிதனாக கருதப்படும் அரச ஊழியர் ஒருவர் அரசாங்கத்தின் அரசியலை விமர்சிக்க முடியாது என்றும் பிரதமர் டி.எம். ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முடியும். எனினும், அரசாங்கத்தின் செயல் திட்டங்களை அழிக்கும் வகையில் செயற்படமுடியாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அரச சேவையில் கட்சி பேதங்கள் பார்க்ககூடாது அதேநேரம், நடுத்தர மக்களுக்கு நாட்டை முன்னேற்றும் திறமை உள்ளதாகவும் பிரதமர் ஜயரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment