
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், கலிஸ் இரட்டைச் சதம் அடிக்க, தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் வலுவான இலக்கை எட்டியது. தென் ஆபிரிக்கா சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரண்டு போட்டிகளில் முடிவில் இரு அணிகளும் 1-1 சமநிலை வகிக்கின்றன. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி கேப்டவுனில் நடக்கிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணிக்கு காலிஸ், டிவிலியர்ஸ் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரட்டை சதம் அடித்த காலிஸ் (224) ஹெராத் சுழலில் வீழ்ந்தார். இதையடுத்து முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 580 ரன்கள் எடுத்து "டிக்ளேர் செய்தது. டிவிலியர்ஸ் (160), ருடால்ப் (51) அவுட்டாகாமல் இருந்தனர். பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் திரிமன்னே (23) ஏமாற்றினார். தில்ஷன் (78) அரைசதம் கடந்து திரும்பினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்திருந்து. சங்ககரா (35) அவுட்டாகாமல் இருந்தார்.
0 comments:
Post a Comment