
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முழுவதும் 3 ஆயிரத்து 581.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட அதிகாரி ஏ.எம்.ஸாலிஹீன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான மாவட்டத்தின் சராசரி மழைவீழ்ச்சி ஆயிரத்து 606 மில்லிமீற்றராகும்.
இந்த மாதத்தில் மாத்திரம் மாவட்டத்தில் 510.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் இந்த ஆண்டை தவிர 2009ஆம் ஆண்டில் 897.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் 2010 ஆம் ஆண்டில் 711.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மாவட்டத்தின் அதிக மழைவீழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் புள்ளவிபர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment