குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பு எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.பீ.பி. சுரங்கனா வித்யாரட்ண வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 30 வருடங்களின் பின்னர் நாடு முழுவதிலும் 25 மாவட்டங்களிலும் நடத்தப்படவிருக்கும் குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்புக் கணக்கெடுப்பில் 80 ஆயிரம் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களும், 16 ஆயிரம் மேற்பார்வை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இக்கணக்கெடுப்பிற்காக அரசாங்கம் ஆயிரத்து 700 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இக்கணக்கெடுப்புக்காக மாவட்ட செயலகங்களுக்கு 16 வாகனங்கள் வழங்கப்படவுள்ளதுடன், கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கென 267 மோட்டார் சைக்கிள்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கணக்கெடுப்பு மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. தொகைமதிப்பு வரைபடம் தயாரித்தல், கட்டடங்களை நிரற்படுத்தல். தகவல் சேகரிக்கும் சுற்று, தகவல்களைத் திருத்தும் சுற்று என மூன்று கட்டங்களாக இடம்பெறும். வரைபடம் தாயாரித்தல், கட்டடங்களை நிரற்படுத்தும் பணிகள் 2010ஆம், 2011ஆம் ஆண்டுகளில் பூர்த்திசெய்யப்பட்டு விட்டன.
தகவல் சேகரிக்கும் சுற்று எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், தகவல்களைத் திருத்தும் சுற்று மார்ச் 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்கள் 80 ஆயிரம் பேருக்கு இம்மாதம் 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதிவரை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், மேற்பார்வை அதிகாரிகள் 16 ஆயிரம் பேருக்கும் ஜனவரி 12ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
தனிப்பட்ட தவல்கள் மற்றும் வீட்டு வசதிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்படவுள்ளன. இது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தில் நபர்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்கள், இடம்பெயர்வு பற்றிய தகவல்கள், உடல் உள இடர்பாடுகள், கல்வித் தகைமை, பொருளாதார நடவடிக்கை தொடர்பான தகவல்கள், கருவளம் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி வீட்டிலுள்ள நபர்கள் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான தகவல்களும் இவ்விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்டுள்ளன.
முதன் முறையாக தேசிய அடையாள அட்டை இலக்கம் கோரப்பட்டிருப்பதுடன், வீடுகளில் இணையத்தளத்தினுள் நுழையவும் வசதிகள் பற்றியும் கோரப்பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பின் போது மக்களால் வழங்கப்படும் தகவல்கள் எந்தவொரு தரப்பினருக்கும் வழங்கப்படாது இரகசியமாகப் பேணப்படும். எனவே, மக்கள் உண்மையான, சரியான தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும். கணக்கெடுக்கவரும் அதிகாரிகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆறு மாதங்களுக்கு மேலாக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பற்றிய விபரங்களும், வீடுகளற்று திறந்தவெளிகளில் வசிப்பவர்கள் பற்றிய தவல்களும் இக்கணக்கெடுப்பின்போது கணக்கிடப்படவுள்ளன.
கணக்கெடுப்புக்கள் நடத்தப்பட்ட பின்னர் திருத்தும் பணிகள் மார்ச் 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறும். இதன்போது கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்கள் வீடுகளுக்குச் சென்று பிறப்பு மற்றும் இறப்புகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை மீள உறுதிசெய்துகொள்வார்கள். இதற்கு மக்கள் அனைவரும் உத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கணக்கெடுக்கவரும் உத்தியோகத்தர்களுக்கு விசேட தொப்பியும், விசேட பையொன்றும் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கான அடையாள அட்டையொன்றும் வழங்கப்படும். எனவே, இவற்றைவைத்து கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களை மக்கள் இலகுவாக அடையாளம் காணமுடியும் என்றும் குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.பீ.பி.சுரங்கனா வித்யாரட்ண மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment