Wednesday, January 04, 2012

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பான முறைப்பாடுகளுக்கு பெக்ஸ் இலக்கம்


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக மாணவர்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க பெக்ஸ் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவியும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளருமான தாரா விஜேதிலக கூறினார். உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் ஏற்பட்ட குழுப்பம் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் இருந்து தகவல் திரட்டி வருவதாகவும் மாணவர்களின் முறைப்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தங்களுக்கு Z புள்ளி குறைவாக வந்திருந்தால் அது குறித்து மீள்பரிசீலினைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பெறுபேறு தவறாக வந்திருந்தாலோ குறைபாடுகள் இருந்தாலே 011-2372280 எனும் இலக்கத்திற்கு பெக்ஸ் மூலம் முறையிட முடியும். அவற்றை தரப்படுத்தி அது குறித்து ஆராயப்படும்.

உயர்தரப் பெறுபேறு தொடர்பில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் முன்னாள் பரீட்சை ஆணையாளர் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார். பெறுபேறு வெளியிடப்பட்ட கம்பியூட்டரையும் மேற்படி குழு பரீட்சித்துள்ளதோடு எதிர்வரும் தினங்களில் Z புள்ளிக்கான சூத்திரத்தை தயாரித்த நிபுணர் குழுவையும் விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment