Wednesday, January 04, 2012

ஆசியாவில் மிக உயரமான இலத்திரனியல் கோபுரம்

ஆசியாவின் மிக உயரமான பல்நோக்கு இலத்திரனியல் கோபுரம் அமைக்கும் பணிகள் கொழும்பில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார். 350 மீற்றர்கள் உயரம் கொண்ட இந்த தாமரைக் கோபுரம் (Lotous tower), ஓய்வுநேர பூங்கா ஒன்றையும் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையின் 7.5 ஏக்கர் நிலப்பரப்பு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணத்தின் மூலம் தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு துறைகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோபுரமானது 50 தொலைக்காட்சி சேவைகளுக்கும், 50 ஔிபரப்பு சேவைகளுக்கும், 10 தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. 30 மாத காலத்தினுள் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ள அதேவேளை, இதன் முகாமைத்துவ நடவடிக்கைகள் யாவும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படவுள்ளது.

100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கோபுரத்திற்கு சீனாவின் எக்ஸிம் வங்கி நிதியுதவி வழங்கவுள்ளது.

0 comments:

Post a Comment