Sunday, January 08, 2012

புராதனப் பொருட்களை அழித்த நால்வர் சந்தேகத்தில் கைது


(புத்தளம் செய்தியாளர்) 
புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட பள்ளம பொலிஸ் பிரிவிலுள்ள தெமல சுரக்குளம எனும் பிரதேசத்தில் புராதனப் பொருட்களை அழித்துக் கொண்டிருந்த 4 பேரை பள்ளம பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை பள்ளம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் புராதனப் பொருட்களை அழித்துக் கொண்டிருந்த ஊர்வாசியொருவரையும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். புராதனப் பொருட்களை அழித்து அவ்விடத்தில் புதையல் தோண்ட முயற்சித்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பள்ளம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

0 comments:

Post a Comment