(பஹமுன அஸாம்)
வைத்தியசாலைகளில் நிலவும் தாதிமார்களின் பற்றாக்குறையை நீக்குவதற்காக 50 ஆயிரம் தாதிமாரை பயிற்றுவிக்க சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார். தற்போது வைத்தியசாலைகளில் 35,000 தாதியர்கள் சேவை புரிகிறார்கள். இவர்களுக்கு மேலதிகமாக மேலும் 25,000 தாதியர்கள் வரை பற்றாக்குறையாக உள்ளனர். இதனாலேயே 50 ஆயிரம் தாதியர்களுக்கு பயிற்சியளிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தான் பதவியேற்கும்போது 16,000 தாதிமார்கள் மாத்திரமே சேவையில் இருந்தாகவும், இத்தொகை ஒன்றரை வருடத்துக்குள் 25000 ஆக உயர்த்தப்பட்டதாகவும், உலகலாவிய ரீதியிலும் இலங்கைத் தாதிமாருக்கு சிறந்த வரவேற்பு இருக்கின்றன. இருந்தும் இலங்கையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக அவற்றக்கு ஈடுகொடுக்க முடியாது உள்ளது எனவும் அமைச்சர் மைத்ரிபால சிரிசேன தெரிவித்தார்.

0 comments:
Post a Comment