Monday, January 02, 2012

நீர்கொழும்பு நகரில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு


(கலாநெஞ்சன்) 
இலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அண்மையில் இந்த வருடத்தின் எட்டாவது இலட்சம் வெளிநாட்டு உல்லாசப் பயணியும் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு பெரு வரவேற்களிக்கப்பட்டது.

அந்த வகையில் நீர்கொழும்பு நகரம் உல்லாசப் பயணத்துறைக்கு பெயர் பெற்றது. தற்போது நகரின் பல இடங்களிலும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை காணக் கூடியதாக உள்ளது. ஹோட்டல் தொழிற் துறையினரும், உல்லாசப் பயண தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரும் அதிகரித்திருக்கும் உல்லாசப் பயணிகளின் வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






0 comments:

Post a Comment