Monday, January 02, 2012

தமிழகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வேட்டை


தமிழகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வேட்டை திரைப்படம் திரையிடபடுகிறது. தமிழ் திரையுலகில் லிங்குசாமியின் இயக்கத்தில் வேட்டை திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ்-யுடிவி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இதில் மாதவன் கோழைத்தனமான பொலீசாகவும், துடிப்பான நாயகனாக ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, அமலா பால் இருவரும் நடித்துள்ளார்கள்.

ரன் திரைப்படத்துக்கு பிறகு நானும் மாதவனும் இந்த படத்தின் மூலமாக இணைந்துள்ளோம். மாதவன் இதில் பொலீஸாக வருகிறார். ஆர்யா- மாதவன் இருவரின் நடிப்பில் பொழுதுபோக்கு சித்திரமாக இப்படம் வந்துள்ளது. நாயகன்கள், நாயகிகள் நான்கு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாக அமைந்துள்ளது. பொங்கல் கொண்டாட்டமாக வருகிற 12ஆம் திகதியன்று வேட்டை தமிழகம் முழுவதும் சுமார் 600 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன என்று இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment