தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு முடங்கிப் போயுள்ள கடலூர் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் உள்ளூர் நிர்வாகம் மோசமான முறையில் பாரபட்சம் காட்டுவதால் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடலூரின் பல பகுதிகளிலும் அவர்கள் குழந்தை, குட்டிகளுடன் இன்று காலிக் குடங்களைக் கையில் ஏந்தியபடி மறியலில் குதித்தனர். இதனால் கடலூரின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டம் வெடித்தது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், புயல் தாக்கியதால் பெரும் சேதத்தை கடலூர் சந்தித்துள்ளது. இதுவரை கரண்ட் வரவில்லை. குடிநீர் இல்லை. பால் கிடைக்கவில்லை. பிள்ளைகளை வைத்துக் கொண்டு கடும் கஷ்டப்படுகிறோம். குடிநீர் விநியோகம் சுத்தமாகஇல்லை. லாரிகளை வைத்து வழங்குகிறது நகராட்சி. ஆனால் அதிலும் பாரபட்சம் பார்க்கிறார்கள். முக்கியஸ்தர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களின் பகுதிகளுக்கும் அதிக அளவில் தண்ணீர் தருகிறார்கள். இது நியாயமா என்று கேட்டனர்.
குடிநீர் முறையாக தரக்கோரி காலிக் குடங்களுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் குதித்ததால் கடலூரின் பல பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

0 comments:
Post a Comment