
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளவில் சிலை ஒன்று இனந்தெரியாதோரால் தகர்க்கப்பட்டதை ஆட்சேபித்து பல்கலைக்கழக மாணவர்களின் இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கொள்ளுப்பிட்டிச் சந்தியில் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக கொழும்பு காலி வீதியில் தற்போது பாரிய வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியிட் மகஜர் ஒன்றைக் கையளிக்கப்போவதாக ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment