
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் வரவேற்றார். வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி யாழ். அரச அதிபர் ஆகியோரை இந்த குழு ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இதன்போது வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் விளக்கமளித்ததாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மக்களுக்கான உதவிகள் மற்றும் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பிரித்தானிய பாராளுமன்ற குழு வினவியதாக அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாகவூம் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment