(றிஸான் முகம்மட்)
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு நடாத்திய இருநாள் செயலமர்வு அண்மையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.


செயலமர்வு அங்குரார்ப்பண வைபவத்தில், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக, இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் ஐ.ஏ.ஹமீட், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம். உதயகுமார், அம்பாறை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 உள்ளுராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் பயிற்சியில் கலந்து கொண்டு நன்மையடைந்தனர்.

0 comments:
Post a Comment