Monday, January 09, 2012

மகிந்த ராஜபக்ஷவின் தங்கையின் கணவர் மீது தாக்குதல்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தங்கை நிரூபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன் தனது குழந்தைகளுடன் இராமேஸ்வரம் கோவிலுக்கு கும்பிட வந்தபோது அங்கு ம.தி.மு.க.வினரும், நாம் தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது நடேசன்மீது தாக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபக்ஷவின் தங்கை நிருபமா. இவரது கணவர் நடேசன். இவர் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போவது வழக்கம். பெரும்பாலும் திருச்செந்தூர், இராமேஸ்வரம் கோவில்களுக்கு அடிக்கடி வருவார். இந்நிலையில் தனது குழந்தைகளுடன் நடேசன் சாமி கும்பிட இராமேஸ்வரம் வந்தார். அவரது வருகை குறித்த தகவல் பரவியதும் ம.தி.மு.க.வினரும், நாம் தமிழர் அமைப்பினரும் அங்கு திரண்டனர். நடேசனை முற்றுகையிட்டு் போராட்டம் நடத்தினர்.

கோவிலுக்கு வரக்கூடாது, தமிழகத்திற்கு வரக்கூடாது என்று கூறி கோஷமிட்டனர். அப்போது திடீரென சிலர் நடேசனை தாக்கிவிட்டனர். மேற்படி அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வரும் அமைப்புகளாகும். இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. அங்கு விரைந்த பொலிஸார் நடேசனையும், அவரது குழந்தைகளையும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

0 comments:

Post a Comment