(ஏ.ஜே.எம்.ஹனீபா)
கடந்த ஆண்டு நடந்த வெள்ளப் பெருக்கு காரணமாக நாவிதன்வெளி பிரதேசத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான இழப்பீட்டுக் காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.கரண் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச். பியசேன கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக கணக்காளர் வை.ஹபீபுல்லா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.ஹமீட், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஆர்.மதியழகன், பிரதேச சபை உறுப்பினர் ஏ.சமட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment