ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் சகல மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸாரினால் வெளியேற்றப்பட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸாருக்கு விடுத்த வேண்டு கோளுக்கிணங்க கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சகல மாணவர்களும் சுமுகமான முறையில் நேற்று பிற்பகல் வெளியேற்றப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பீடாதிபதிகள் கூடி மேற் கொண்ட தீர்மானத்திற்கமைய மேற்படி பல்கலைக் கழகத்தின் மூன்று பீடங்களும் நேற்று முன்தினம் மூடப்பட்டன.
எனினும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் தங்கியிருந்த நிலை யில் பாதுகாப்பு சூழ் நிலையை கருத்திற் கொண்டு எஞ்சியுள்ள மாணவர்களையும் வெளியேற்றுமாறு மிரிஹான பொலிஸார் பல்கலைக்கழக நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதகையடுத்து மாணவர்களை வெளியேற்ற அனுமதி தருமாறு கல்கொட வில மஜிஸ்திரேட் நீதவானிடம் பொலிஸார் அனுமதி கோரியதற்கிணங்க நீதவான் அனுமதியளித்துள்ளார்.
நீதிமன்ற அனுமதிக்கமைய அங்குச் சென்ற பொலிஸார் மாணவர்களை வெளியேற்றிய தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, பல்கலைக் கழகத்தை அண்மித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments:
Post a Comment