Thursday, January 05, 2012

நுவரெலியாவில் பனி; சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு


நுவரெலியாவின் சில பிரதேசங்களில் தற்போது ஏற்படும் பனிப் பொழிவை காண்பதற்காக அதிகளவிலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்றுவருகின்றனர். கடந்த ஏழு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப் பொழிவு காணப்பட்டதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார். புல்மேடுகள், மரக்கறிச் செய்கைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் அதிகாலை வேளையில் பனித்துளிகள் படர்ந்து காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

வழமைக்கு மாறாக தொடர்ச்சியாக பல நாட்களாக நிலவும் இந்த காலநிலை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள போதிலும் மரக்கறி வகைகளும், ஏனைய செய்கைகளும் கருகிப் போவதற்கு அது காரணமாக அமைவதாக மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் நுவரெலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை ஏழு பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடைந்திருந்ததாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மவாட்டத்தில் நிலவும் கடும் குளிர் காலநிலையால் மரக்கறி செய்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அநேகமான பிரதேசங்களில் இரவு வேளைகளில் கடும் குளிர்காலநிலையும் பகலில் கடும் வெப்பமும் நிலவுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

புல்மேடுகள், மரக்கறிச் செய்கைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் அதிகாலை வேளையில் பனித் துளிகள் படர்ந்து காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். வழமைக்கு மாறாக தொடர்ச்சியாக பல நாட்களாக நிலவும் இந்தக் காலநிலை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ள போதிலும் மரக்கறி வகைகளும் ஏனைய செய்கைகளும் கருகிப் போவதற்கு அது காரணமாக அமைவதாக மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பாக அவற்றின் உரிமையாளர்கள் தமது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment