
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான கால அவகாசத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 8ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment