Tuesday, January 03, 2012

ஒலுவில் அல்-அஷ்ஹர் வித்தியாலயம் பிள்ளைநேயப் பாடசாலையாகத் தெரிவு


(சம்யா) 
அக்கரைப்பற்று கல்விய வலயத்திலுள்ள ஒலுவில் அல்-அஷ்ஹர் வித்தியாலயம் இவ்வாண்டு பிள்ளைநேயப் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 51 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இன்றுவரை பௌதீக ரீதியிலான எவ்வித அபிவிருத்தியும் அடையவில்லை என்பதை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஸேஹ் ஏ.எல். எம். காசீம் அவர்களிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இப்பாடசாலை இவ்வாண்டிலிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.

இதன்மூலம் இப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைய இத்திட்டம் உதவும் எனவும் தெரிவித்தார். கடந்த சுனாமியின் போது வெகுவாகப் பாதிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு சுனாமி மீள்கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படாமையினால் கடந்த 7 வருடங்களாக மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடப்பற்றாக்குறை மிகவும் கவலைக்கிடமாக காணப்பட்டிருந்தது. இதனை நிவர்த்தி செய்து தந்த வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் இப் பாடசாலைச் சமுகம் நன்றி தெரிவிப்பதாக பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் எம். பைஷால் தெரிவிக்கின்றார். 

0 comments:

Post a Comment